விமானத்தை தகர்த்து விடுவதாக எச்சரித்த விமானி... அலறிய பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பணியில் இல்லாத விமானி ஒருவர் தம்மிடம் வெடிப்பொருட்கள் இருப்பதாக கூறி எஞ்சிய பயணிகளை அச்சுறுத்திய குற்றத்திற்காக சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்ட பொலிசார், 27 வயதான அரேபிய விமானி ஒருவர் சம்பவத்தன்று மாட்ரிட்டில் இருந்து துபாய் பயணமாகியுள்ளார்.

மது போதையில் இருந்த அவரது நடவடிக்கையானது எஞ்சிய பயணிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரித்த விமான பணிப்பெண்ணை எட்டி உதைத்துள்ளார்.

மட்டுமின்றி தம்மிடம் வெடிப்பொருட்கள் இருப்பதாகவும், விமானத்தை தகர்த்து விடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் விமான ஊழியர்கள், பயணிகள் என அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து குறித்த விமானி மீது புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானத்தில் சுமார் 3,000 டொலர் அளவுக்கு பொருள் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers