நாகப்பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்: அதிர்ச்சி வீடியோவின் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
164Shares

உகண்டாவில் தனது கோழியை கொன்ற நாகப்பாம்பை நபர் ஒருவர் உணவாக சாப்பிட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவப்பா கிராமத்தை சேர்ந்தவர் கெனித் ஒடியம். இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அந்த சமயத்தில் கெனித்தின் வீட்டில் இருந்த கோழியை அங்கு வந்த நாகப்பாம்பு கொத்தியதில் கோழி உயிரிழந்தது.

இதை பார்த்த கெனித் கோபமடைந்தார். இதையடுத்து குறித்த பாம்பை அவர் அடித்து கொன்றார். பின்னர் பாம்பை உணவாக சமைத்த கெனித் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

அவரின் செயல் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பை சாப்பிட்ட கெனித்துக்கு உடல்நலக்கோளாறு எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்