உங்கள் தோல்விகளுக்கு பாகிஸ்தானை பலிகடா ஆக்குவதா? டிரம்பை கடுமையாக விளாசிய இம்ரான் கான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
47Shares

பாகிஸ்தானால் எந்த வித நன்மையும் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறிய கருத்துக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கான சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ராணுவ உதவியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

சமீபத்தில் பாகிஸ்தானால் அமெரிக்காவுக்கு எந்த வித நன்மையும் இல்லை என்றும், பாகிஸ்தான் என்ன செய்துவிட்டது என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

’9/11 தாக்குதலில் எந்த ஒரு பாகிஸ்தானியரும் இல்லை, இருந்தாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 75,000 உயிர்களை பலி கொடுத்துள்ளது.

123 பில்லியன் டொலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க உதவி என்பது வெறும் 20 பில்லியன் டொலர்கள் தான். எங்கள் பழங்குடியினர் வாழும் பகுதிகள் நாசமானது. லட்சக்கணக்கானோர் வீடு இழந்து அகதிகளாகினர்.

சாதாரண பாகிஸ்தானியரின் ரத்தம் உறிஞ்சப்பட்டது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு தரை மற்றும் வான்வழி தொடர்பு வசதிகளைப் பாகிஸ்தான் வழங்கி வருகிறது. வேறு எந்தக் கூட்டணி நாடாவது இத்தனை தியாகங்களை செய்துள்ளதா?

உங்களுடைய தோல்விகளுக்குப் பாகிஸ்தானை பலிகடாவாக்குவதற்கு பதிலாக 1,40,000 நேட்டோ படைகள், 2,50,000 ஆப்கான் படைகள், ஆப்கான் போரில் ஒரு ட்ரில்லியன் டொலர்கள் செலவு செய்து, தாலிபான்கள் முன்பை விட வலுவாக எழுச்சிபெற்றது எப்படி என்பதை டிரம்ப் யோசிக்கட்டும்’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்