திருமண ஆசை காட்டி பாலியல் உறவு... தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
456Shares

ஐக்கிய அமீரகத்தில் திருமண ஆசை காட்டி பாலியல் உறவில் ஈடுபட்டு பின்னர் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியர்களான இளைஞர் மற்றும் இளம்பெண்ணை ஒரு மாத சிறை தண்டனைக்கு பின்னர் நாடுகடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் 26 வயதான அந்த இளைஞர் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது காதலியான 24 வயது இளம்பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

குறித்த இளைஞருக்கு அவரது தாயார் திருமணத்திற்கு வேறு பெண் பார்ப்பதாக அறிந்த அந்த யுவதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தற்கொலைக்கு முயன்ற யுவதியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு அறுமுகமான இருவரும் சில நாட்களிலேயே மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர். இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திய நிலையில், பல முறை இருவரும் உடல் உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது குறித்த இளைஞருக்கு திருமணத்திற்காக வேறு பெண் பார்ப்பதாக தகவல்

அறிந்ததும் அந்த யுவதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மருத்துவமனையில் வைத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அதுவரை நடந்தவற்றை யுவதி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஓராண்டு காலமாக இருவரும் காதலித்து வந்துள்ளதையும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வேன் என குறித்த இளைஞர் அளித்த வாக்குறுதியை அடுத்து பல முறை உடலுறவில் ஈடுபட்டதாகவும் விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி தமக்கு அந்த இளைஞர் தங்க நகைகளும் பரிசக அளித்ததாக தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு புறம்பாக பாலியல் உறவில் ஈடுபட்டதற்காகவும், தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் கூறி இருவரையும் நீதிமன்றம் தண்டித்துள்ளது.

இருவருக்கும் தலா ஒரு மாத சிறை தண்டனையும், அதன் பின்னர் ஐக்கிய அமீரகத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் நீதிமன்றம் அளித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்