சிரியாவில் விஷ வாயு தாக்குதல்: 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2011–ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

அதிலும் வடக்கு சிரியா பகுதியில் கடந்த 2 மாதங்களாக அதிகமான வான்வழித்தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதற்கு மனித உரிமைகள் ஆணையம் துவங்கி பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவ்வப்போது அதனை மீறி இரசாயன தாக்குதல்களும் நடத்தபட்டு வருகின்றன.

இந்த நிலையில் அலெப்போ நகரத்தில் உள்ள கிராமப்பகுதியில் நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிரியாவின் தடயவியல் மருத்துவ பொது இயக்குனர் ஜாகர் ஹாஜோ கூறுகையில், சிகிச்சை அளிக்கப்பட்ட 105 பேரில் 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கடுமையான நிலையில் இருந்த இரண்டு நபர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை முடிந்ததும் விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்