மரணத்தை நேரில் பார்த்தேன்: அந்தமான் தீவில் கொல்லப்பட்ட இளைஞரின் டைரிக் குறிப்புகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அந்தமான் தீவில் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்ட அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள் சில வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அந்தமானில் ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் குறிப்பேடு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் கொல்லப்பட்ட ஜான் ஆலெம் சில தகவல்களை பதிவு செய்துள்ளார். அந்தமான் தீவுகளுக்கு விமானம் மூலம் அக்டோபர் 16 ஆம் திகதி ஜான் ஆலெம் சென்றுள்ளார்.

நவம்பர் 14 ஆம் திகதி சில மீனவர்கள் உதவியுடன் கள்ளத்தனமாக சென்டினல் நோக்கிப் பயணித்துள்ளார்.

மாலை வேளையில் அவர் பழங்குடிகள் குடியிருக்கும் பகுதிக்கு அருகே சென்றுள்ளார். அங்கிருந்த பழங்குடிப் பெண்கள் ஜானைப் பார்த்து பயத்தில் கோஷமிட்டுள்ளனர்.

அங்கு சில ஆண்கள் கையில் வில் அம்புடன் இருந்துள்ளனர். அவர்களிடம், நான் ஜான். உங்களை நான் நேசிக்கிறேன். இயேசி கிறிஸ்துவும் உங்களை நேசிக்கிறார் எனக் கூறியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து திரும்பியிருக்கிறார்.

இரண்டாவது முறையாக காயக் மூலம் தனியாக அங்கு பயணித்திருக்கிறார். பழங்குடிகளிடம் மீன், கத்தரிக்கோல், கயிறு உள்ளிட்ட பொருட்களைக் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் தலையில் மலர் கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்த ஆண் ஒருவர் ஜானைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார். ஜான் பதிலுக்கு பாட்டு பாடியுள்ளார். அந்த பழங்குடிவாசிகள் அமைதி அடைந்துள்ளதாக அந்த டைரியில் ஜான் பதிவு செய்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர்

ஒரு அம்பை எய்து தாக்க அது ஜானின் பைபிளில் பாய்ந்துள்ளது. பின்னர் ஜான் சதுப்பு நிலக் காடுகள் வழியாக தப்பித்துள்ளார்.

மூன்றாவது நாள் அங்கு சென்றபோதே அவருக்கு தனது மரணம் பற்றி தெரிந்திருக்கிறது. அதனாலேயே, "நான் சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகாக உள்ளது.

அழுகிறேன். இதுதான் நான் பார்க்கும் கடைசி சூரிய அஸ்தமனமா என்று தெரியவில்லை" என எழுதியிருக்கிறார்.

இதனிடையே மீண்டும் அந்தமானில் உள்ள சில மீனவர்களை சென்டினல் பகுதியில் விடுமாறு நிர்பந்தித்துள்ளார்.

அடுத்த நாள் மீனவர்கள் குறித்த பகுதிக்கு சென்றபோது பழங்குடிகள் ஜானின் சடலத்தை இழுத்துக் கொண்டிருந்ததை மீனவர்கள் பார்த்துள்ளனர்.

அந்தமானில் ஜான் ஆலென் குறித்து பேசிய நபர் ஒருவர், ஜான் வடக்கு சென்டினல் மக்கள் தொடர்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் எனவும், 2006 ஆம் ஆண்டு இரு மீனவர்கள் அங்கு சென்றதைப் பற்றியும் அவர்களால் அந்த இருவரும் கொல்லப்பட்டதைப் பற்றியும் கூறினேன் என்றார்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் ராணுவத்தினர் சென்டினல் பகுதியில் தங்கத்தைப் புதைத்து வைத்ததாகச் சொல்லப்படுவதை நம்பி அந்த மீனவர்கள் அங்கு சென்று உயிரை இழந்தனர் என்ற தகவலையும் ஜானிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்