திருமணத்திற்கு முதல் நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த மணப்பெண்: கண் விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தன்னுடைய வருங்கால கணவனுடன் மணப்பெண் ரிசார்டில் தங்கியிருந்த போது, அந்த பெண்ணிடம் வெயிட்டர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பாமாசின் Sandals Resort-ல் Jeff Pascarella(32)-Ashley Reid(32) ஜோடி கடந்த 2016-ஆம் ஆண்டு தங்களுடைய திருமணத்திற்காக அங்கு தங்கியுள்ளனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு( ஏப்ரல் 15-ஆம் திகதி) புதுமாப்பிள்ளையான Jeff Pascarella தன்னுடைய அறையில் இருந்த பாத்ரூமிற்கு சென்றுள்ளார். Ashley Reid அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது இவர்களின் ரூமிற்கு அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு வந்த ரிசார்டின் வெயிட்டர் Adderley என்ற நபர், அந்த பெண்ணின் முக்கியப் பகுதியில் கையை வைக்க முயன்றுள்ளார்.

அந்த நேரத்தில் எதிர்பாரதவிதமாக Ashley Reid கண்விழித்து பார்த்த போது, அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். உடனடியாக பாத்ரூமில் இருந்த Jeff Pascarella வெளியே வந்து அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அந்த நபர் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தால், அந்த ஜோடி நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதில் நஷ்ட ஈடாக தங்களுக்கு 23.5 மில்லியன் பவுண்ட் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் ரிசார்ட் நிர்வாகமோ, அவர்கள் சிலவற்றை மறைத்து கூறுகின்றனர். அவர்கள் கூறியது போன்று எதுவுமே நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஜோடி அந்த ரிசார்ட் நிர்வாகம் தங்களை அணுகி இந்த விவகாரத்தை இதோடு விட்டுவிடுங்கள் என்று பேரம் பேசியதாகவும் கூறியுள்ளனர்.

இருப்பினும் இறுதியில் நீதிமன்றத்தின் முழு விசாரணைக்கு பின்னரே உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து தெரியவரும். இந்த சம்பவம் நடந்த மறுநாள் திருமணம் எந்த ஒரு பிரச்சனையின்றி நடைபெற்றதாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்