உலகத்தையே எரிச்சலடையச் செய்த ஒரு வீடியோ- தலைவர்கள் இப்படியா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கு கொண்ட இரண்டு நாடுகளின் தலைவர்கள் இடம்பெறும் ஒரு வீடியோவை ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அதை விரும்புவதால் அல்ல, அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள இருவரின் ஒரு செயல் ஏற்படுத்திய எரிச்சலால்.

அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில்? ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், சவுதி இளவரசர் மொஹமத் பின் சல்மானும் ஹை பைவ் அடித்துக் கொண்டு சிரிக்க சிரிக்க பேசிக் கொள்ளும் காட்சிதான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

உலகமே இருவர் மீது எரிச்சலில் இருக்க, அவர்கள் அப்படி என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் சமூக ஊடகங்களின் தற்போதைய ஹாட் டாப்பிக்.

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட சம்பவத்தால் கோபமடைந்துள்ள மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சல்மானைத் தனிமைப் படுத்துவதற்காகவே அவரைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல, ரஷ்ய அதிபர் வரும் வரை அவரை யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

பிரித்தானியாவில் Sergei Skripalமீது நச்சுத்தாக்குதல் நடத்தியதால் பல நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துள்ள ரஷ்ய அதிபர் புடின் வந்ததும், சல்மான் முகமெல்லாம் மலர அவருடன் ஹை பைவ் அடித்துக் கொள்வதுடன் இருவரும் வாயெல்லாம் பல்லாக பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால் வேறு யாரும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. மூன்று உக்ரைன் நாட்டு படகுகளை கைப்பற்றிய சம்பவமும் புடினை கடும் அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஏழு வினாடிகள் மட்டுமே நீடிக்கும் அந்த வீடியோவில் புடினும் சல்மானும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் வேடிக்கையாக கணித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு பேரும் கொலைகார சர்வாதிகாரிகள் என்று ஒருவர் ட்வீட்ட, நம் பாக்கெட்டில்தான் டிரம்ப் இருக்கிறார் என்று இன்னொருவர் ட்வீட்டினார்.

இரண்டு பேருக்கும் பொதுவான விடயம் ஏதோ இருக்கிறது என இன்னொருவர் ட்வீட்டியிருக்க, அந்த வீடியோ உலக அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers