உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தாய்லாந்து குகையின் தற்போதைய நிலை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

12 கால்பந்தாட்ட மாணவர்கள் சிக்கித் தவித்து, உலகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தாய்லாந்து குகை தற்போது சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.

தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள குகைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, ஜூன் மாதம் 12 கால்பந்தாட்ட மாணவர்கள் தங்களுடைய பயிற்சியாளருடன் சேர்ந்து சிக்கிக்கொண்டார்.

உலகம் முழுவதுமுள்ள ஊடகங்கள் அனைத்திலும், இந்த சம்பவம் தலைப்பு செய்தியானதை அடுத்து, பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட சிறந்த உள்நீச்சல் வீரர்கள் மாணவர்களை பத்திரமாக மீட்க தாய்லாந்திற்கு விரைந்தனர்.

17 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் ஒரு வழியாக அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியில் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மாணவர்களுக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற சார்ஜென்ட் சமன் குணன், ஜூலை 6ம் தேதியன்று பரிதாபமாக பலியாகினர்.

மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதும், குகைமுழுவதும் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி அதற்கான நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இன்னும் குகைக்குள் மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் குகைக்கு வெளியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதியை சுற்றிலும், ஏராளமான கடைகளும், பொழுதுபோக்கு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றனர்.

நவம்பர் 16ம் தேதி பூங்கா திறக்கப்பட்டதிலிருந்து தினம்தோறும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த இடத்தை கண்டுகளிக்க குவிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் மீட்பு பணியின்போது உயிரிழந்த சார்ஜென்ட் சமன் குணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தங்களுடைய பொழுதை கழித்து வருகின்றனர்.

இதனால் அந்த இடமே தற்போது பெரும் பரபரப்பில், மக்கள் கூட்டத்தில் மிதந்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers