இச்சையை தூண்டும் வகையில் கவர்ச்சி ஆடை அணிந்த நடிகை: 5 ஆண்டுகள் சிறை?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஆடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்ட எகிப்து நாட்டில் ஆபாசமாக ஆடை அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல நடிகை ராணியா யூசஃப்.

கெய்ரோ திரைப்பட விழாவில் 44 வயதான நடிகை ராணியா, கருப்பு நிறத்தில் தனது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்து கலந்துகொண்டார்.

இச்சையைத் தூண்டும் வகையில் இவரது ஆடை இருந்ததாகவும், எகிப்திய மக்களின் கலாசாரங்களை இவர் அவமதித்துவிட்டதாகவும் கூறி இவர் மீது எகிப்திய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ராணியா, நான் இதுபோன்ற ஆடையை முதல் முறையாக அணிகிறேன், இந்த ஆடை மக்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை, என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்