இரு நண்பர்கள் உள்ளிட்ட 140 பேரை கொன்றேன்: ஒரு மரண மருத்துவரின் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பெல்ஜியம் நாட்டில் கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவர் ஒருவர் இதுவரை 140 நோயாளிகளை கொலை செய்துள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் பிரபல மருத்துவர்களில் ஒருவர் 57 வயதாகும் Marc van Hoey. இவரே தற்போது தமது நோயாளிகளில் 140 பேரை கருணைக்கொலை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதில் இருவர் நீண்ட காலமாக அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் எனவும் மருத்துவர் மார்க் வான் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 500 நோயாளிகளுக்கு கருணைக்கொலை செய்துகொள்ள ஆலோசனையும் வழங்கியுள்ளதாக கூறும் மருத்துவர் மார்க் வான்,

ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே கருணைக்கொலை முடிவை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மருத்துவர் மார்க் வானை பொலிசார் கைது செய்துள்ளதுடன் விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளனர்.

இதனால் இனிமுதல் மருத்துவர் மார்க் வான் கருணைக்கொலை செய்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தமது மகள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தாயார் ஒருவர் மருத்துவர் மார்க் வானை கருணைக்கொலைக்கு நிர்பந்தித்துள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால், மருத்துவர் மார்க் வான் தனது நோயாளிக்கு விஷம் அளித்ததாக வழக்குப் பதியப்படும்.

2002 ஆம் ஆண்டு பெல்ஜியம் நாடு கருணைக்கொலைக்கு அனுமதி அளித்த நிலையில் இதுவரை 15,000 பேர் கருணைக்கொலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு மட்டும் 2,309 பேர் கருணைக்கொலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2014 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இதுவரை 3 சிறார்களும் கருணைக்கொலைக்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவர் மார்க் வான் பெல்ஜியத்தில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 15,000 பேருக்கு கருணைக்கொலை ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

பெல்ஜியத்தின் மொத்த சனத்தொகையானது 11 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்