கணவர்கள் செய்யும் தவறுக்காக சிறையில் சித்ரவதைகளை அனுபவிக்கும் பெண்கள்: அதிர்ச்சி தரும் காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மடகாஸ்கரில் குற்றம்சாட்டப்பட்ட கணவர்களுக்காக பெண்கள் சிறையில் அடைக்கும் விநோத நிகழ்வு நடைபெற்று வருகிறது.

தங்களது கணவர் அல்லது உறவினர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக மடகாஸ்கரின் மத்திய பகுதியிலுள்ள அன்ட்சிரபே என்ற நகரிலுள்ள சிறைச்சாலையில் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அடைக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

எவ்வித விசாரனையுமின்றி இவர்களில் பலர் மாதக்கணக்கிலும், வருடக்கணக்கிலும் சிறையில் இருக்கின்றனர்.

இது குறித்து அந்த சிறையில் இருக்கும் பெண் ஒருவர் கூறுகையில், இது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் பெண்களை ஏன் கைது செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள என் கணவர் குற்றம் செய்தாரா என்பது எனக்கு தெரியவில்லை. முதலில் என் கணவரை கைது செய்த அவர்கள், அதன் பின்பு என்னை கைது செய்தனர்.

இது குறித்த உண்மை எனக்கு தெரியும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவன் உன் கணவன் தானே, அது எப்படி தெரியாமல் இருக்கும்ம் நீ பொய் கூறுகிறாய் என்று கைது செய்தனர்.

சிறையில் அடித்தனர். இவர்கள் பெண்களை சிறையில் அடைப்பது கூட பரவாயில்லை, ஆனால் அவர்களுடன் குழந்தைகளையும் அவர்கள் சிறையில் அடைப்பது மிகவும் பாவமாக இருக்கிறது, செய்யாத குற்றத்திற்காக இவர்கள் ஏன் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இங்கு விசாரணைக்கு முன்பு கைது செய்யப்படுவது விதிமுறை என்றும், அதற்கு விலக்கு இல்லை என்று ஆம்னெஸ்டி கூறுகிறது.

மேலும் விசாரணைக்கு முன்பு கைது செய்யப்படுவதால், குற்றவாளிகள் மக்களால் தாக்கப்படுவதாக அந்நகர நீதிபதிகள் கூறியுள்ளனர். இது குறித்த குற்றச்சாட்டுகளுக்கு கணவர்களுக்கு பதிலாக பெண்கள் சிறையில் அடைக்கப்படுவது பற்றி அந்நாட்டு அரசு பதில் அளிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்