உலகில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டினது தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகின் இந்தாண்டிற்கான சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு பட்டியலில், முதல் இடத்தை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

உங்கள் கையில் இருக்கும் கடவுச் சீட்டு வெறும் காகிதம் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மொத்த உலகத்தையும் உங்களுக்கு காட்டும் திறவுகோல் தான் அது.

விசா இன்றி மற்ற நாடுகளுக்கு பயணிக்கும் உரிமை குறிப்பிட்ட சில நாடுகளின் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விஷயம்.

அப்படி உலககில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய வாய்ப்பளிக்கும் முதல் 5 நாடுகளின் பட்டியலை கனடாவை தலைமையிடமாகக் கொண்ட Passport Index அறிவித்துள்ளது.

அதில், கடந்த முறை முதல் இடத்தில் இருந்த சிங்கப்பூரை, பின்னுக்கு தள்ளி ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டை பயன்படுத்தி, விசா இல்லாமல் 167 நாடுகளுக்கு செல்லமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று, அங்கு சென்று விசா பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைக் கூட பிடிக்காத, ஐக்கிய அரபு அமீரகம் தற்போது முதல் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணம், கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி மேலும் 4 நாடுகளுக்கு விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டை வைத்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டதே ஆகும்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும்(166 நாடுகள்)ஜேர்மனியும்(166 நாடுகள்) அதே இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் 11 நாடுகள் உள்ளன. அந்த நாடுகளில் கடவுச்சீட்டை பயன்படுத்தி 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

அமெரிக்கா, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, Luxembourg, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே மற்றும் தென்கொரியா.

நான்காவது இடத்தில் பிரித்தானியா கடவுச் சீட்டு உள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 164 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் எனவும், இதே இடத்தில் பெல்ஜியம், ஆஸ்திரியா,ஜப்பான், கிரீஸ், போர்சுகல், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து மற்றும் கனடா உள்ளன.

ஐந்தாவது இடத்தில் செக்குடியரசு, ஹங்கேரி உள்ளன. இந்த நாட்டின் கடவுச் சீட்டை பயன்படுத்தி 163 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers