நடுவானில் கிழிந்து தொங்கிய விமான என்ஜினின் பகுதி: பயத்தில் அழுத பயணிகள்.. வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் Las Vegas நகரிலிருந்து Tampa நகர் நோக்கி சென்று கொண்டிருந்த விமான என்ஜினின் உலோக உறை கிழிந்து தொங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Frontier 260 ரக விமானமானது நேற்று காலை வானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினின் உலோக உறை கிழிந்து தொங்கியது.

இதையடுத்து என்ஜினின் உள்பகுதி அப்படியே வெளியில் தெரிந்தது

இதை பார்த்த பயணிகள் பயத்தில் அலற தொடங்கியதோடு, பெண் பயணிகள் சிலர் அழுதேவிட்டனர்.

இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்குங்கள் என பயணிகள் கூச்சல் போட தொடங்கினர்.

உறை கிழிந்தாலும் என்ஜின் சாதாரணமாகவே இயங்கியது, இதையடுத்து எந்தவித அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்னால் விமானி லாவகமாக விமானத்தை கீழே இறக்கினார்.

விமானத்தின் உள்ளிருந்த பெண் ஒருவர் இது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட நிலையில் அது வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்