காணாமல் போன அழகி சடலமாக கண்டெடுப்பு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக சென்ற இடத்தில் காணாமல்போனதாக கருதப்பட்ட ஒரு அழகிய இளம்பெண்ணின் உடல் அவள் தங்கியிருந்த ஹோட்டலின் பின் பக்கத்திலேயே பாதி புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Carla Stefaniak (36) தனது உறவினராகிய ஒரு பெண்ணுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியபின், திடீரென சென்ற மாதம் 28ஆம் திகதி மர்மமான முறையில் மாயமானார்.

இந்நிலையில் பொலிஸ் நாய்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு பாதி புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Costa Ricaவில் Stefaniakஐ தேடிக்கொண்டிருந்த அவளது குடும்பத்தார், அவள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலிருந்தனர்.

மியாமியைச் சேர்ந்த Stefaniak, தனது பிறந்த நாளைக் கோண்டாடுவதற்காக தனது உறவினர் பெண் ஒருவருடன் Costa Ricaவுக்கு சென்றிருந்தார். பின்னர் அவரது உறவினர் மட்டும் நாடு திரும்பிவிட, Stefaniak மட்டும் Costa Ricaவிலேயே தங்கிவிட்டார்.

தொடர்ந்து தனது குடும்பத்தாருக்கு மொபைலில் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்த Stefaniak, பெருமழை பெய்வதாகவும் மின்சாரம் தடைபட்டு விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதற்குப்பின் அவரிடமிருந்து அவரது குடும்பத்தாருக்கு எந்த செய்தியும் வரவில்லை.

பின்னர் அவர் புறப்பட்டுவிட்டதாக அவர் தங்கியிருந்த ஹோட்டல்காரர்கள் தெரிவித்தாலும், Stefaniak அங்கிருந்து புறப்படவேயில்லை என்று கருதுகின்றனர் அவரது குடும்பத்தார்.

இதற்கிடையில் தனது சொந்த விருப்பத்தின் பேரில் காரில் ஏறி சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது நம்பக்கூடியதாகவே உள்ளதால், இந்த வழக்கை தொடரப்போவதில்லை என அதிகாரிகள் கூறிவிட்டது Stefaniakஇன் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...