ராட்சத மலைப்பாம்புடன் சண்டை போட்ட 6 பேர்! இறுதியில் என்ன நடந்தது? வெளியான வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் சுமார் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடிப்பதற்கு 6 பேர் போராடிய திக் திக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் Padang Pariaman மாகாணத்தில் மீனவர் ஒருவர் தன் நண்பர்களுடன் அங்கிருக்கும் காட்டுப்ப்பகுதி வழியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு தண்ணீர் செல்லும் ஒரு சிறிய பகுதியில் ஏதோ ஒன்று பெரிதாக நகர்வதைக் கண்டுள்ளார்.

தண்ணீரில் பெரிய மீன் எதாவது அடித்து வந்திருக்கும், மீனாக இருக்கலாம் என்று சென்று பார்த்த போது, அங்கு ராட்சத மலைப்பாம்பைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

அதன் பின் தன் நண்பர்களுடன் அந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஏனெனில் இந்த பாம்பை அப்படியே விட்டால் மனிதர்கள் யாரையும் விழுங்கிவிடும் என்பதால், இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

ஆனால் சுமார் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடிப்பது அவ்வளவு எளிதா என்ன? பிடிக்க முயன்ற ஆறு பேரில் ஒருவரின் கணுக்காலை பாம்பு கெட்டியாக பிடித்தது. இதனால் மற்றவர்கள் முதலில் அந்த பாம்பின் வாயை மூடினர். அதன் பின்பு அவரை அதிலிருந்து மீட்டனர்.

பாம்பை பிடித்த அவர்கள் ஒரு பெரிய கூண்டின் உள்ளே வைத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர், அவர்கள் அந்த பாம்பை, பல கிலோமீற்றர் தூரம் கொண்டு சென்று விட்டனர்.

பாம்பை பிடிப்பதற்கு 6 பேருடம் சண்டை போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers