பல ஆண்களை காதலித்தும் திருமணம் கைகூடவில்லை: விரக்தியில் இளம்பெண் எடுத்த விசித்திர முடிவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த நடிகைக்கு தொடர் காதல் தோல்விகள் ஏற்பட்ட நிலையில் விரக்தியடைந்த அவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஜெனிலின் ரோடிர்குஸ் (30) என்ற நடிகை பல ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ள நிலையில் இந்த காதலுமே அவருக்கு நிலைக்கவில்லை.

இப்படியே விட்டால் தனக்கு திருமணமாகாமல் போய்விடுமோ என கவலைப்பட்ட ஜெனிலின் அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார்.

அதன்படி தன்னை தானே திருமணம் செய்ய முடிவெடுத்தார் ஜெனிலின்.

இது குறித்து குடும்பத்தாரிடம் அவர் கூறிய நிலையில் முதலில் அதிர்ச்சியடைந்த அவர்கள் பின்னர் ஏற்று கொண்டார்கள்.

இதையடுத்து £240 மதிப்புடைய வெள்ளை நிற கவுன் ஆடையில் மணப்பெண்ணாக ஜெனிலின் ஜொலித்தார்.

பின்னர் தனக்கு தானே மோதிரம் மாற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஜெனிலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஜெனிலின் கூறுகையில், என்னை நானே திருமணம் செய்து கொண்டதில் எனக்கு கவலையில்லை.

என் காதல் எல்லாமே தோல்வியில் முடிந்ததால் இம்முடிவை எடுத்தேன். அயர்லாந்துக்கு தனியாக தேனிலவுக்கு செல்ல திட்டம் போட்டுள்ளேன்.

இனிமேல் என்னை நானே அதிகமாக நேசிக்க உறுதி கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers