நடுவானில் மோதி கொண்ட இரு விமானங்கள்: கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் குறித்து வெளியான தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜப்பானில் இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி கொண்ட நிலையில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

KC-130 மற்றும் F/A-18 என்ற இரண்டு ராணுவ விமானங்கள் ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டன.

பின்னர் இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட நிலையில் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் ஒரு விமானத்தில் ஐந்து பேர் இருந்த நிலையில் இன்னொரு விமானத்தில் 2 பேர் இருந்துள்ளனர்.

இதில் இருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மற்ற ஐவரின் நிலை என்னவென தெரியவில்லை.

காப்பாற்றப்பட்ட இருவரில் ஒருவர் நலமாக உள்ளார் என தெரியவந்துள்ளது. இன்னொருவரின் நிலை குறித்து தெரியவில்லை.

விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, வழக்கமான பயற்சியின் போது இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது

ஜப்பானில் அமெரிக்க ராணுவத்தின் 50 ஆயிரம் வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இது போன்ற விபத்து சம்பவங்கள் நடைபெறுவது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல எனக் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்