உலகளவில் வேகமாக வளர்ச்சியடையும் நகரங்களின் பட்டியல்: முதலிடத்தில் எந்த நகரம்?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

2018ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டுக்குள் அதிகமான பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டின் தலைமையானது உலக அளவில், பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆய்வு செய்தது. அதன்படி வேகமாக வளர்ச்சி அடையும் டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி, சென்னை, திருப்பூர் ஆகிய மூன்று நகரங்கள் இடம்பிடித்துள்ளன. ஏனைய நகரங்களும் இந்திய நகரங்கள் தான்.

 1. சூரத் (9.17 சதவித வளர்ச்சி)
 2. ஆக்ரா (8.58 சதவித வளர்ச்சி)
 3. பெங்களூரு (8.5 சதவித வளர்ச்சி)
 4. ஹைதராபாத் (8.47 சதவித வளர்ச்சி)
 5. நாக்பூர் (8.41 சதவித வளர்ச்சி)
 6. திருப்பூர் (8.36 சதவித வளர்ச்சி)
 7. ராஜ்கோட் (8.33 சதவித வளர்ச்சி)
 8. திருச்சி (8.29 சதவித வளர்ச்சி)
 9. சென்னை (8.17 சதவித வளர்ச்சி)
 10. விஜயவாடா (8.16 சதவித வளர்ச்சி)

மேலும், தொழில் வளர்ச்சி மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்திலும், ஜப்பானின் டோக்கியோ 2வது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 3வது இடத்திலும் உள்ளன.

 • நியூயார்க்
 • டோக்கியோ
 • லாஸ் ஏஞ்சல்ஸ்
 • லண்டன்
 • ஷாங்காய்
 • பெய்ஜிங்
 • பாரிஸ்
 • சிகாகோ
 • கங்க்ஜோ
 • ஷென்ஸ்ஹென்

இந்த நகரங்கள் ஏற்கனவே வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே முதலிடத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நகரங்களில் பாரிஸ், சிகாகோ ஆகிய நகரங்களின் வளர்ச்சி விகிதம் சரிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்