வீட்டிலேயே வனவிலங்கு பூங்கா..£785,000 மதிப்பிலான காலணிகள்.. பிரம்மிக்க வைக்கும் 16 வயது சிறுவனின் வாழ்க்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

துபாயை சேர்ந்த 16 வயது கோடீஸ்வர சிறுவனின் வீட்டில் இருக்கும் விடயங்கள், நினைத்து பார்க்க முடியாத வகையில் பிரம்மாண்டமாக உள்ளது.

Channel 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் The World's Weirdest Homes என்ற நிகழ்ச்சிக்காக உலகின் விசித்திர மற்றும் பிரம்மாண்டமான வீடுகள் குறித்து ஆவணப்படம் எடுத்து வருகிறது.

அந்த வகையில் நிகழ்ச்சி குழுவினர் துபாயில் உள்ள மிக பெரிய கோடீஸ்வர சிறுவன் ரஷித் சைப் பெல்ஹசா (16) வீட்டுக்கு சென்றனர்.

ரஷித் வீடு நினைத்து பார்க்க முடியாத வகையில் பிரம்மாண்டமாக உள்ளது.

வீட்டின் பரப்பளவு மிகபெரியது என்பதால் முழுவதையும் நடந்து சென்றே சுற்றி பார்ப்பது கடினம் என்பதால் கோல்ஃப் மைதானத்தில் உபயோகப்படுத்தும் வண்டியை தான் ரஷித் மற்றும் குடும்பத்தார் பயன்படுத்துகிறார்கள்.

ரஷித் வீட்டில் ஷூக்கள் மற்றும் செருப்புகளை அதிகளவு உள்ளது.

இதற்கென ஒரு தனி இடமே உள்ளது. இந்த காலணிகளின் மதிப்பு £785,000 ஆகும்.

ரஷித்தின் பிறந்தநாளுக்கு £200,000 மதிப்புடைய பெராரி காரை அவர் தந்தை பரிசாக அளித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனியாக வனவிலங்கு பூங்காவே ரஷித் வீட்டில் வைத்துள்ளார்.

இங்கு சிங்கம், புலி, குரங்கு, கரசி, ஒட்டகம் உள்ளிட்ட 500-க்கும் அதிகமான மிருகங்கள் உள்ளன.

வனவிலங்கு பூங்காவை பல பிரபலங்கள் வந்து அடிக்கடி பார்வையிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ரஷித்தின் வாழ்க்கை முறையை பார்த்து வியக்கவே அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.5 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்