அமெரிக்க அழகியைக் கொலை செய்த குற்றவாளி கைது: முதல் முறையாக வீடியோ வெளியானது

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக கோஸ்டா ரிக்காவுக்கு சென்ற மியாமியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்து, கைவிலங்கிட்டு, பொலிசார் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

மியாமியைச் சேர்ந்த Carla Stefaniak (36) என்னும் இளம்பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில், Bismark Espinosa Martinez (32) என்னும் செக்யூரிட்டி கார்டை கோஸ்டா ரிக்காவின் தலைநகரான San Joseஇல் கைவிலங்கிட்டு பொலிசார் அழைத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கோஸ்டா ரிக்கா சென்ற Stefaniak திடீரென மாயமான நிலையில், ஒரு வாரத்திற்குப் பின் அவரது உயிரற்ற உடல் அரை நிர்வாண நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சற்று தொலைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

Stefaniakஇன் உடலை அடையாளம் காட்டிய அவரது தந்தை Carlos Caicedo, கண்ணீருடன் தனது மகளின் கோர மரணம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இதற்கிடையில் Stefaniakஇன் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள், அவரது மரணம் பாலியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளனர்.

Stefaniak காணாமல் போவதற்குமுன் தனது தோழி ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றில், தனது அறையில் தண்ணீர் இல்லை என்றும், கடும் புயல் வீசுவதால் தனது பக்கத்து அறையில் வசிக்கும் Martinezஇடம் தண்ணீர் வாங்கித் தரும்படி கேட்டு கொள்ளப்போவதாக தெரிவித்திருந்ததையடுத்து, Martinezஐ விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக உளற, பொலிசார் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இந்நிலையில் பிரேதப் பரிசோதனையில் Stefaniakஇன் கைகள், கழுத்து முதலான பாகங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருந்ததோடு, தலையில் பலமாக தாக்கப்பட்டதால் அவர் கொல்லப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers