கணவரை பழிவாங்க பிஞ்சுக்குழந்தையின் ஆடைகளை களைந்து தாய் கொடுத்த கொடூர தண்டனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பிரிந்து சென்ற கணவனை பழிவாங்குவதற்காக தாய் ஒருவர் குழந்தையின் ஆடைகளை களைந்து தண்டனை கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யாவை சேர்ந்த எலிசாவே க்ளிமோவா என்று 20 வயது தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருடைய கணவன் அலெக்ஸாண்டர் பாட்ரியசோவ் (28) விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பிஞ்சுக்குழந்தை, தாயின் ஆடையில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய், குழந்தையின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக பால்கனியில் வைத்துள்ளார்.

அதிகமான குளிரின் காரணமாக நடுக்கம் தாங்காமல் அந்த குழந்தை அழுதுள்ளது. அதனை புகைப்படம் எடுத்த எலிசாவே, முன்னாள் கணவருக்கு அனுப்பி, இறுதியாக உன்னுடைய குழந்தையை ஒருமுறை பார்த்துக்கொள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்சாண்டர், சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு, என்னுடைய குழந்தையை முன்னாள் மனைவி கொலை செய்ய போகிறாள். யாரவது காப்பாற்றுங்கள் என பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதில், அலெக்ஸ்சாண்டர் பிரிந்து செல்லும்போது செலவிற்கு கூட பணம் கொடுக்காததால், எலிசாவே மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற போராடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகைப்படங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்ட பொலிஸார், குழந்தையின் உடல்நிலை தற்போது நலமாக இருந்தாலும், அவருடைய அம்மாவின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்