அழகிய முகத்திற்கு ஆசைப்பட்ட 40 பேரை அகோரமாக மாற்றிய நபர்: எச்சரிக்கும் பொலிஸார்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் முகமாற்று அறுவைசிகிச்சையை தவறாக செய்து ஏரளாமானோரின் முகத்தை அகோரமாக மாற்றிய மருத்துவரை பொலிஸார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரேசில் நாட்டை சேர்ந்த ஸ்லி முருகமி என்ற நபர், தனியாக தொழில் செய்ய ஆசைப்பட்டு கொய்யானிய பகுதியில் கடந்த 2012 முதல் மருத்துவமனை ஒன்றினை துவங்கி நடத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய கணக்கினை துவக்கி அதன்மூலம், அதிகமான வாடிக்கையாளருக்கு வலை வீசியுள்ளார்.

குறைந்த செலவில் முகத்தின் அழகை மெருகேற்றி தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

அதனை நம்பி 40க்கும் அதிகமான வடிக்கையார்கள் அவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சையில் பழைய முகம் கூட இல்லாமல், ஒரு அகோரமான முகத்தினை பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஸ்லி சரியான உரிமம் பெறாமல் மருத்துவமனை நடத்தி வந்துள்ளதும், அவர் ஒரு போலி மருத்துவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவருடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், தற்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து குற்றவாளியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவனையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கூறுகையில், ஸ்லி பயன்படுத்திய மருந்து ஐக்கிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் உள்ள மருத்துவமனை மற்றும் அழகுசாதன கடைகளிலும் பயன்படுத்த கூடிய ஒரு ஆபத்தான மருந்து என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers