13 வயது மகளின் கன்னித்தன்மையை அதிகவிலைக்கு விற்ற மொடல் அழகி: அதன்பின் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பெற்ற மகளின் கன்னித்தன்மையை £ 20k பவுண்ட்ஸ்க்கு விற்ற முன்னாள் மொடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மொடல் அழகியான 35 வயது இரினா கிளாட்ஸ்க், தனக்கு அதிகமான பணத்தேவை இருந்ததால், மகளின் கன்னித்தன்மையை விற்க முடிவு செய்தார்.

அதன்படி தன்னுடைய மகளை ஆபாசமாக படமெடுத்து, பல பணக்காரர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு ஒரு பணக்காரர் சம்மதம் தெரிவிக்கவே செல்யாபின்ஸ்கிலிருந்து மாஸ்கோவுக்குப் மகளுடன் பறந்த இரினா, அங்கு ஒரு பணக்காரரிடம் £19,100 பவுண்ட்ஸ்க்கு தன்னுடைய மகளின் கன்னித்தன்மையை விற்க வியாபாரம் பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து அடுத்த நிமிடமே இரினா கைது செய்யப்பட்டார். அதன் பிறகே அவருக்கு தெரியவந்துள்ளது, பணக்காரராக இருந்தவர் ஒரு ரகசிய துப்பறிவாளர் என்பது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, சிறுமி இன்னும் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்ற மருத்துவ அறிக்கையை பார்த்ததும், இரினாவிற்கு 4 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மீட்கப்பட்ட சிறுமியும், இரினாவின் மற்றொரு மகனும் அவருடைய பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers