77 வயது காதலனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து தவறாக நடந்துகொண்ட 62 வயது செவிலியர்: இறுதியில் நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆஸ்திரியா நாட்டில் அதிக தூக்க மாத்திரை கொடுத்து காதலி உறவு வைத்திருந்த போது காதலன் பரிதாபமாக இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில்வியா என்ற 62 வயது பெண், சால்ஸ்பர்க் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தன்னுடைய 72 வயது காதலன் ஹெய்ன்ஸிற்கு 7 தூக்க மாத்திரைகள் கொடுத்து உறவு வைத்துள்ளார்.

பின்னர் அதிகாலை எழுந்த பொழுது, மூச்சில்லாமல் ஹெய்ன்ஸ் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதிக தூக்கமாத்திரையால் காதலன் இறந்ததை அறிந்த சில்வியா, கொலை சம்பவம் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக அங்கிருந்த குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கினை விசாரித்த நீதிபதி, கொலை செய்தல் மற்றும் செய்த தவறை மறைக்க முயற்சித்த குற்றத்திற்காக, சில்வியாவிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers