இறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை: முதன் முறையாக வெளியான புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர், இறந்தவரின் கர்ப்பபை மூலமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை தொடர்பான தகவல் வெளியான போதும், அந்த வரலாற்று சாதனைக்கு சாட்சியான தம்பதிகளின் புகைப்படம் மற்றும் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியானதில்லை.

ஆனால் தங்களது அதிர்ஷ்ட தேவதைக்கு முதலாமாண்டு பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் முதன் முறையாக தங்களைக் குறித்த தகவல்களையும், புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

பிரேசிலின் சாவ் பாவ்லோ பகுதியை சேர்ந்த ஃபேபியானா அமொரிம் திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில் பிறப்பிலேயே கர்ப்பபை இல்லாத M.R.C.H என்ற விசித்திரவகை உடலமைப்பு தமக்கு அமைந்திருப்பதை முதன் முறையாக உணர்ந்துள்ளார்.

வாழ்க்கையில் ஒருமுறை கூட மாதவிடாய் இருந்ததில்லை என்றபோதும் மருத்துவரை சந்திக்க எண்ணாத அந்த நொடியை முதன் முறையாக ஃபேபியானா சபித்தார்.

தமது நிலையை வெளிப்படுத்தி திருமணத்தில் இருந்து விலகிக் கொள்ள கிளாடியா சாண்டோசிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனாலும், ஃபேபியானா உடன் மட்டுமே வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க முடிவு செய்துள்ளதாக கிளாடியா உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கடந்த பின்னரும், பிள்ளை ஒன்று இல்லை என்ற ஏக்கம் அவரை நோகடித்துக் கொண்டே இருந்தது.

பல முறை சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் உரிய பலனை அது தரவில்லை. இந்த நிலையிலேயே, கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் ஃபேபியானாவுக்கு தகவல் தெரியவருகிறது.

தொடர்ந்து நம்பிக்கை கொண்ட ஃபேபியானாவுக்கு 2016 ஆம் ஆண்டு சாவ் பாவ்லோ நகர பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறப்பிலேயே கர்ப்பபை இல்லாத பெண் ஒருவரை மருத்துவ சோதனைக்காக தேடுவது தெரியவந்துள்ளது.

அந்த மருத்துவமனையை தொடர்பு கொண்ட ஃபேபியானா, அந்த மருத்துவமனை தெரிவு செய்த 10 தம்பதிகளில் ஒருவராக தெரிவானார்.

கர்ப்பபை மற்று அறுவை சிகிச்சை என மட்டுமே மருத்துவர்களால் தெரியப்படுத்திருந்த நிலையில் அதன் அடுத்த கட்டம் தொடர்பில் எந்த தகவலையும் அவர்கள் இவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

குறிப்பிட்ட நாளில் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. மரணமடைந்த ஒரு பெண்ணின் கருப்பை தான் தமக்கு பொருத்தப்பட்டுள்ளது என்ற தகவலை மருத்துவர்கள் கூற கேள்விப்பட்டதும் முதலில் வியப்பே எழுந்தது என கூறும் ஃபேபியானா,

ஒரு கருப்பை தற்போது தமக்குள் இருப்பதும் அதன் மூலம் பிள்ளை பெற்றெடுக்க முடியும் என்ற உண்மை தெரியவந்த நிமிடம் மறக்கவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை முயற்சியில் ஃபேபியானாவின் உயிருக்கு ஆபத்து நேரலாம், அடுத்த கட்டம் செல்ல சம்மதமா என்ற கேள்விக்கு ஒரு கணம் கூட யோசிக்காமல் ஃபேபியானா ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து IVF முறையில் கருத்தரிப்பு ஏற்பாடுகள் நடைபெற்றன. முதல் முயற்சியிலேயே ஃபேபியானா கருத்தரித்துள்ளார்.

8-வது மாதம் அறுவை சிகிச்சை வழியாக ஒரு பெண் பிள்ளையை ஃபேபியானா பெற்றெடுத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த அந்த குழந்தைக்கு லூயிசா சாண்டோஸ் என பெயரும் சூட்டியுள்ளனர்.

வாழ்க்கையில் தாயாகும் பாக்கியம் இல்லை என கருதி இருந்த ஃபேபியானாவின் மடியில் தாம் ஒரு வரலாற்று சாதனை என்பதை அறியாமல் குழந்தை லூசியா இருக்கும் புகைப்படத்தை அந்த தம்பதி முதன் முறையாக வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்