தமிழச்சியை காதலித்து திருமணம் செய்த வெளிநாட்டு நபர்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரபல திரைப்பட நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமாகிருஷ்ணன் வெளியிட்ட திருமண புகைப்படம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்கள் பலர் அங்கிருக்கும் நபர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வர்.

ஆனால் பெரும்பாலும் அவர்கள் தமிழ்நாட்டின் கலச்சாரம் தான் பிடித்திருக்கிறது, அதனால் தமிழகத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தமிழகம் வந்து தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொள்வர்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமாகிருஷ்ண்ன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்று நான் ஒரு அழகான திருமணத்திற்கு சென்றிருந்தேன். அதில் மணப்பெண் தமிழகத்தைச் சேர்ந்தவள், மணமகன் இத்தாலியைச் சேர்ந்தவர்.

பார்க்க அற்புதமாக இருந்தது, ஒரே உலகம், ஒரே குடும்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்