தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இவர்கள் முதலிடம்! வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தொகை எவ்வளவு?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

வெளிநாட்டில் சம்பாதித்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை உலக வங்கி அறிவித்தது.

இதன்படி 2017-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வெளிநாடுகளில் பணி செய்யும் இந்தியர்கள் அனுப்பிவைத்த மொத்தத் தொகை 6,900 கோடி டொலராகும்.

இதற்கு அடுத்த இடங்களில் சீனா (6400 கோடி டொலர்), பிலிப்பைன்ஸ் (3300 கோடி டொலர்), மெக்சிகோ (3100 கோடி டொலர்), நைஜீரியா (2200 கோடி டொலர்) மற்றும் எகிப்து (2000 கோடி டொலர்) போன்றவை உள்ளன.

இந்தியர்கள் அனுப்பிய தொகை 2015-ம் ஆண்டில் இந்த தொகை 6,891 கோடி டொலராகவும், 2016-ம் ஆண்டில் 6,274 கோடி டொலராகவும் இருந்தது.

மேலும் அதிக வருவாய் பெறும் நாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, 2017-ம் ஆண்டில் உலக அளவில் அனுப்பப்பட்ட மொத்தத் தொகை 7 சதவீதம் அதிகரித்து 61,300 கோடி டொலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்