ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதித்த நாடு: வியக்கவைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் ஆடம்பர திருமணங்களுக்கு அதிரடி தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும், திருமண செலவை குறைக்க வழி செய்யும் நோக்கிலும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

சமீப காலமாக சீனாவில் வரதட்சிணை மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக அரசுக்கு தகவல் தெரியவந்துள்ளது. மேலும், திருமண விழாவில் சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரங்கள் தொடர்பில் முக்கிய முடிவெடுக்கும் பொருட்டு கடந்த வாரம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குழு ஒன்று கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது.

அதில் திருமணத்தை எளிமையான முறையில் நடத்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற ஆடம்பரத்தை முற்றாக ஒழித்து, பாரம்பரிய முறைப்படி திருமணங்களை நடத்த குறித்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மதிப்புகள் மற்றும் இலக்குகளை பிரதிபலிக்கும் வகையில் திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும் எனவும்,

இதனால் ஏழைகளும் பணக்காரர்களுக்குமான இடைவெளி இல்லாமல் போகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடம்பர திருமணங்களால் பெரும்பாலான மணமகளின் குடும்பங்கள் கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளது சீனாவில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 18 வயது இளம்பெண்ணின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் அளித்த பரிசுகளின் மொத்த மதிப்பு 400,000 டொலர் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்