கர்ப்பிணி இளம்பெண்னை கொன்று புதைத்த இளைஞர்! சடலத்தை வைத்து பெண்ணின் தந்தை செய்யபோகும் செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் கர்ப்பிணி காதலியை இளைஞர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் காதலியின் சடலத்தை அவர் திருமணம் செய்து கொள்ள இறந்த பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.

பிரின்ஸ் ஒவாபி என்ற இளைஞரும் பெர்தா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் பெர்தா கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில் பிரின்ஸ் வீட்டுக்கு பெர்தா வந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் பெர்தாவை கொலை செய்த பிரின்ஸ் சடலத்தை தனது வீட்டிலேயே புதைத்தார்.

இந்நிலையில் பெர்தாவின் தந்தை வெல்ப்ரிட் மகளை காணவில்லை என பொலிஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் பிரின்ஸ் வீட்டில் பெர்தா கொன்று புதைக்கப்பட்டதை கண்டுப்பிடித்து சடலத்தை எடுத்தனர்.

பின்னர் பிரின்ஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனது மகளின் சடலத்தை பிரின்ஸ் முழு பாரம்பரிய சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெல்ப்ரிட் வலியுறுத்தியுள்ளார்.

இது காலங்காலமாக தங்கள் சமூகத்தில் நடக்கும் நிகழ்வு என அவர் கூறினார்.

இது குறித்து அவர் அதிகாரிகளுடன் பேசி வரும் நிலையில், அவர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்