வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இலங்கை பெண்.. நெகிழ்ச்சி சம்பவத்தை விளக்கிய நபர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதியில் இந்தியாவைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக ஆவாத் குதீர் அல் ஷீமாரி குடும்பத்தில் வீட்டு வேலை வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற அவர் சில தினங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்புவதற்கு முன், அவர் வேலை பார்த்த வீட்டில் இருந்த நபர்கள் அளித்த பிரிவு உபசரிப்பு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அந்த அளவிற்கு அவர்கள் அவரை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து வழியனுப்பினர்.

இதையடுத்து இவருக்கு கிடைத்த பிரிவு உபசரிப்பை பார்த்து சவுதியில் வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று அறிவதற்காக பிரபல தமிழ் ஊடகம் ஒன்று சவுதியில் 10 ஆண்டுகளாக வேலை செய்யும் தமிழகத்தின் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் வஹாப்பைத் என்பவரிடம் பேட்டி எடுத்துள்ளது.

அப்போது அவர், அந்த வீடியோவை நானும் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சவுதியை பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள், குழந்தைகளைப் பெற்றெடுப்பதோடு சரி, அந்தக் குழந்தைகளை வளர்ப்பது, வீட்டில் வேலைசெய்பவர்கள்தான்.

அதுமட்டுமின்றி வீட்டையும் அவர்கள் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். அவர்களை வீட்டு வேலை செய்பவர்கள் என்பதைவிட கார்டியன் என்று சொல்லலாம்.

சில வீடுகளில், குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பதுகூட, வீட்டில் வேலைசெய்யும் பெண்களாகத் தான் இருப்பார்கள்.

இதில் 100-க்கு 60 சதவீதம் பேர் பாபுவைப் போன்று மரியாதையுடன் நடத்தப்படுவார்கள், 40 சதவீதம் பேர் மிகவும் மோசமாக நடத்த்தப்படுவார்கள்.

சவுதியில் பெரும்பாலும் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வேலை செய்கின்றனர்.

இங்கு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது பாலியல் வன்கொடுமை தான், குறிப்பாக இங்கு வயதான பெண்களை வேலைக்கு வைத்து கொள்ளமாட்டார்கள், அப்படி அவர்கள் வேலை செய்தாலும், அங்கிருக்கும் ஆண்களால் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவர்.

இப்படி சவுதியில் வேலை பார்த்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வயதாகிவிட்ட காரணத்தினால் ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பினார்.

இலங்கைக்கு வந்து சேர்ந்து சில தினங்களில் அவரைப் பிரிந்து வாழமுடியாமல், அவர் வளர்த்த மகன் சவுதியில் இருந்து இலங்கைக்கு திரும்பினார்.

பிறந்ததில் இருந்தே தாய் அருகில் வளர்ந்து வந்ததால், அந்த இளைஞரால் தாயை விட்டு இருக்க முடியவில்லை. திடீரென வீட்டிற்குள் நுழைந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது போன்று நிறைய நெகிழ்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன.

இங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அந்ததந்த தூதரகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்திய தூதரம் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளும், இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட தூதரகங்கள் கொஞ்சம் மந்தமாக இருப்பார்கள்.

இதைப் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும், வேறு விவரங்களை எங்களால் வெளிப்படையாக சொல்ல முடியாது என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்