அண்டார்டிகா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

அண்டார்டிக்கா பகுதியில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ஜென்டினாவின், டியரா டெல் பியூகோ மற்றும் சிலி போன்ற நாடுகளில் வெகுவாக உணரப்பட்டுள்ளதாகவும் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பூகம்பத்தின் மையப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதிப்பு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து முழுவிபரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பதுடன் உயிர் தேசங்கள் தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...