தவறான முறையில் என்னை தூக்கினார்... அந்த நிமிடம் உறைந்து போனேன்: வானத்தில் நேர்ந்த அவலம் குறித்து பெண்ணின் பகிர்வு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘மீ டு’ என்கிற இயக்கத்தின் வாயிலாக பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து உலகத்தில் தைரியமாக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், ஹாங்காங்கின் தனியார் விமான நிறுவனத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் வீனஸ் பங் என்பவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து பகிர்ந்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தேன். முதல் முறையாக விமானத்தில் பணியை தொடங்கிய நாளில் விமானி ஒருவர் தவறான முறையில் என்னை தொட்டு தூக்கினார்.

அந்த நிமிடத்தில் எனக்கு கடும் கோபம் வந்தது. ஆனால் அதை விட பயமும், பதற்றமும் அதிகம் இருந்தது.

நான் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டேன். நான் அதில் இருந்து மீண்டுவர பல நாட்கள் ஆனது, பாலியல் ரீதியான தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என விமானபணிப்பெண் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...