எங்களிடம் ஆதாரம் உள்ளது! மாயமான மலேசிய விமானம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மலேசிய விமானம் மாயமாவதற்கு உடல் உறுப்பு கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என சீன ஆன்மீக குழு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணம் செய்த சீன ஆன்மீக குழு உறுப்பினர்களை பழி வாங்கவே இந்த சதி நடந்திருப்பதாகவும் அந்த குழு சந்தேகம் தெரிவித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீனா தலைநகர் பெய்ஜிங் நோக்கி கடந்த 2014 ஆம் ஆண்டு புறப்பட்ட MH370 என்ற மலேசிய விமானம் மாயமானது.

குறித்த விமானம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை. சர்வதேச நாடுகள் பல ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதல்கள் எதுவும் உரிய பலனைத் தரவில்லை.

இந்த நிலையில் சீனாவில் தடை செய்யப்பட்ட ஆன்மீக குழு ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த குழுவின் முக்கிய நிர்வாகியான டர்லீன் டிப்டன் இந்த விவகாரம் தொடர்பில் தம்மிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாயமான மலேசிய விமானத்தை சீனாவில் உள்ள உடல் உறுப்பு கொள்ளையர்கள் கும்பல் திட்டமிட்டு கடத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களை தற்போது வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளில் பலர் தங்களது ஆன்மீக குழு உறுப்பினர்கள் என்பதால் பழி வாங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் ஒருநாள் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாயமான மலேசிய விமானத்தில் மொத்தமுள்ள பயணிகளில் 153 பேர் சீனர்கள். விமானம் மாயமானது முதல் இதுவரை மீட்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசு சுமார் 14.5 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளது.

இதனிடையே சீன ஆன்மீக குழு நிர்வாகி டர்லீன் டிப்டனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் விமானி எட்வர்ட் பேக்கர், இதுபோன்ற தகவல்களை பரப்புவதை முதலில் தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மாயமான விமானம் தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அந்த இரவு என்ன நடந்தது என்பது குறித்து யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை என்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்