வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் ஒப்பந்தத்தின் செயல் திட்டம்: சர்வதேச நாடுகள் ஒப்புதல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை, 2020ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

போலந்து நாட்டின் கேட்டோவைஸ் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப்பட்டது.

சர்வதேச நாடுகள் அனைத்தும் இதற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த நடைமுறையினால் பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், 2020ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே கார்பன் வெளியேறுகிற அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கினை எட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த மைக்கேல் குர்திகா கூறுகையில், ‘பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை ஒன்றிணைத்து நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும்.

இது நீண்ட பாதையை கடந்து வந்துள்ளது. யாரையும் விட்டு விடாமல் இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்த செய்வதற்காக கடுமையாக உழைத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பருவநிலை குறித்த அடுத்த மாநாட்டை சிலி நாட்டில் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்