இறுதிச்சடங்கில் சவப்பெட்டியில் இருந்து வந்த இறந்த பெண்ணின் குரல்? அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் இறந்த பெண் இறுதிச் சடங்கு செய்வதற்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்ட போது, சவப்பெட்டியிலிருந்து சத்தம் வந்ததால், அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அர்ஜெண்டினாவின் Buenos Aires பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த புதன் கிழமை உயிரிழந்தார்.

இதனால் உயிரிழந்த அவர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கிற்கான வேலை நடந்துள்ளது. அப்போது திடீரென்று சவப்பெட்டியின் உள்ளே ஏதோ சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

உடனடியாக உறவினர்கள், இது இறந்த பெண்ணின் குரல் தான் என்று உடனடியாக காரில் அந்த சவப்பெட்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மழை பெய்து கொண்டிருந்த போதும், உடனடியாக காரின் பின்புறத்தில் சவப்பெட்டியில் இருக்கும் இறந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

அப்போது அந்த பெண் இறந்து 24 மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளனர். கொட்டும் மழையில் மருத்துவமனைக்கு வெளியில் இருந்த சாலையில் இந்த சம்பவம் நடந்ததால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்