அமெரிக்காவுக்கு திடீர் மிரட்டல் விடுத்த வடகொரியா! காரணம் என்ன?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அணுஆயுத அழிப்பு நடவடிக்கை நிறுத்தப்படும் சூழல் ஏற்படும் என வடகொரியா மிரட்டியுள்ளது.

சமீபத்தில் மனித உரிமை மீறல் தொடர்பாக வடகொரிய ஜனாதிபதி கிம்முக்கு நெருக்கமான சோ ராயிங் ஹே உட்பட மூன்று வடகொரிய அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது.

இது வடகொரியாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறுகையில், ‘வடகொரியாவுடனான உறவில் நட்புறவை பேணுவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் பாராட்டக் கூடியவை. ஆனால், வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து சில ஆண்டுகளாகவே பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

இதன்மூலம் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதை வடகொரியா கைவிடும் என்று அமெரிக்கா நினைத்தால், அது அமெரிக்காவின் தவறான கணிப்பாகும். மேலும் இது எங்களுடைய அணு ஆயுதங்களை அழிப்பதற்கான பாதைக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா 22 ஏவுகணை செலுத்தி சோதனைகளை நடத்தியதற்கு, அந்நாட்டின் மீது ஐ.நா.சபையில் அமெரிக்காவின் தலைமையில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்