ராஜ நாகத்தை வைத்து வித்தை காட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் ராஜ நாகத்தை வைத்து வித்தை காட்டும் ஒருவரை எதிர்பாராத நேரத்தில் அது கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Yuttapong Chaibooddee (35) என்பவர், தாய்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் ராஜ நாகம் ஒன்றை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தார்.

திடீரென அந்த ராஜ நாகம் அவரது கையில் தன் பற்களைப் பதித்தது.

கடிபட்ட உடன் அவர் தன் கையைக் கவ்விக் கொண்டிருந்த நாகத்தை பிடித்து கீழே வீசிவிட்டாலும், சிறிது நேரத்திற்குள் சுய நினைவிழந்து விழுந்திருக்கிறார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருடைய நிலையைக் கண்ட மருத்துவர்கள் அவருக்கு அதிக அளவில் மாற்று மருந்தைக் கொடுத்துள்ளனர்.

Yuttapong மூன்று இரவுகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபின்னர் வீடு திரும்பினாலும், அந்த பாம்பின் விஷத்தின் தாக்கம் அவரை பெரிய அளவில் பாதித்துள்ளது.

அவரது கை, முன்னங்கை, தொடைகள் மற்றும் உதடுகளின் உள்பகுதி ஆகிய இடங்களில் தீப்பட்டு வெந்தது போன்ற அடையாளம் காணப்படுகிறது.

பல முறை தான் பாம்புகளிடம் கடிபட்டாலும் இதுபோல் விஷம் பயங்கரமாக தன்னை பாதித்ததில்லை என்கிறார் Yuttapong.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்