ஆவி என் உடலில் புகுந்துவிட்டது...300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மத போதகர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் 300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கடவுளின் தூதர் என அழைக்கப்படும் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா மதபோதகராகவும், மனநல மருத்துவராகவும் பணியாற்றி வந்தார்.

இவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில் 300க்கும்‌ மேற்பட்ட‌ பெண்களை‌ பாலியல் வன்கொடுமை செய்ததாக‌ ஜவாகோ மீது சில மாதங்களுக்கு முன் அவர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஆவி தன் ‌மீது‌ புகுந்து‌ பெண்களை‌ வன்கொடுமை செய்ததாக கூறினார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பிரேசில் காவல்துறையினர் அந்த மதபோதகரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்