பிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

கொங்கோவில் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் பெண் குழந்தையினை பிரசவித்துள்ளார்.

எனினும் குழந்தை பிறந்த பின்னர் தாய் இறந்துவிட்டார்.

குழந்தை பிறந்து ஆறு நாட்கள் ஆகியிருந்த நிலையில் குழந்தையிலும் எபோலா வைரஸ் தாக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் ஐந்து வாரம் தொடர்ச்சியாக குறித்த குழந்தைக்கு சிகிச்சை அழிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மருத்துவ உலகே ஆச்சரியப்படும் வகையில் குழந்தை நோய் தாக்கத்திலிருந்து தப்பித்துள்ளது.

இதன் பின்னர் குழந்தையின் தந்தையும், சித்தியும் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

உயிர்கொல்லி நோயான எபோலாவிலிருந்து குழந்தை தப்பித்து மருத்துவ உலகை ஆச்சரியப்படுத்தியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers