இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடிக்கும் அபாயம்! எச்சரிக்கை விடுப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சுனாமியால் பேரழிவை சந்தித்துள்ள இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று இந்தோனேஷியா நாட்டில் அனக் கிரகட்டோவா எரிமலை வெடித்ததில் உண்டான சுனாமியால் ஜாவா, சுமத்ரா தீவுகள் கடுமையான பாதிப்பினை சந்தித்தன.

சுனாமி குறித்த எந்த முன்னெச்சரிக்கையும் விடப்படாததால் பல மரங்கள் வேருடன் சாய்ந்தன, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அனக் கிரகட்டோவா எரிமலையை சுற்றி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு யாரும் போக வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த எச்சரிக்கை 2 கிலோ மீற்றர் என இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடலோர பகுதியில் இருந்து குடியிருப்புவாசிகளை வேறு இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி வழியே செல்லும் விமானங்கள் வேறு வழியில் செல்வதற்கும் விமான துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்னும் அதிக முறை எரிமலை வெடிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும், இதன் காரணமாக மீண்டும் சுனாமி பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

அனக் கிரகட்டோவா எரிமலையில் இருந்து சாம்பல் புகை, வெப்ப வாயு மற்றும் பிற எரிமலை பொருட்கள் வானுயர பரவியுள்ளது.

REUTERS

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்