நடுவானில் நிர்வாணமாக ஓடிய இளைஞர்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து இந்தியா சென்ற விமானத்தில் இளைஞர் ஒருவரின் அருவருப்பான செயல் எஞ்சிய பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் இருந்து இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற விமானத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த இளைஞர் தமது ஆடைகளை களைந்துவிட்டு பயணிகளின் இருக்கைகளுக்கு இடையே ஓடி நடந்துள்ளார்.

இந்த காட்சிகளால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள், அந்த இளைஞரின் செயல் கண்டு ஆத்திரம் கொண்டனர்.

பின்னர் அந்த இளைஞரை அவரது இருக்கையில் உட்கார வைக்கும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ஒரு போர்வையைக் கொண்டு அந்த நபரை போர்த்தியுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 150 பயணிகளின் முன்னிலையில் அந்த நபர் நிர்வாணமாக அங்கும் இங்கும் ஓடியுள்ளார்.

லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், திடீரென்று மொத்த ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக காட்சி அளித்ததன் காரணம் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்