சாக்ஸ் பயன்பாட்டால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம்: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் சாக்ஸின் நூலிழை ஒன்று பச்சிளம் குழந்தையின் கால் பாதத்தில் ஒருவார காலமாக சிக்கியதால் தற்போது அதன் பாதத்தையே துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையே தற்போது பாதத்தை துண்டிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒருவார காலமாக குறித்த குழந்தையின் இடது கால் 4-வது விரலில் சாக்ஸின் ஒற்றை இழை சிக்குண்டு இருந்துள்ளது.

இது நாளடைவில் குறித்த குழந்தையின் கால் விரலில் உள்ள ரத்த ஓட்டத்தை பாதித்ததாகவும், இதனால் கால் பாதத்தில் தொற்று ஏற்பட்டது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், தொடர்ந்து குளிர் காலநிலை என்பதால் ஒருவார காலம் தமது பிள்ளையை குளிப்பாட்டவில்லை எனவும்,

இதனால் அதன் கால் விரலில் நூலிழை சிக்கியிருந்ததை கவனிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி குழந்தை விடாது அழுதபோது கூட தாம் அதற்கு வயிற்றுவலி என கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்