சிதைந்து போன அழகான குடும்பம்: தகவல் தெரியாமல் கோமாவில் இருக்கும் கணவன்..கண்ணீர் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் வெடி விபத்தில் மொத்த குடும்பமும் உயிரிழந்த தகவலை அறியாமல் நபர் ஒருவர் கோமா நிலையில் மருத்துவமனையில் இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Magnitogorsk நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தானது கேஸ் கசிவால் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் சுக்ரத் உல்படவ் (24), அவர் மனைவி ரேட்சாம்போ (24) மற்றும் தம்பதிகளின் மூன்று குழந்தைகள் சிக்கினர்.

இதில் சுக்ரத்தை தவிர மற்ற நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

படுகாயமடைந்த சுக்ரத் மருத்துவமனையில் கோமா நிலையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.

தன்னுடைய மொத்த குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டனர் என்பதை கூட அறியாமல் சுக்ரத் கோமா நிலையில் இருப்பது மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அவர் உயிர் பிழைத்து விடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்