சவுதி பெண்ணுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் வழங்கவேண்டும்: அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சவுதியிலிருந்து தப்பிவந்த இளம் பெண் ரஹாப் மொகமது அல் குனான்க்கு அடைக்கலம் அளிப்பது குறித்து அவுஸ்திரேலியா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஹாஃப் மொகமது அல் குனான் (18) குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்துள்ளார்.

தனது குடும்பத்தினர் தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி அவுஸ்திரேலியா செல்ல முடிவெடுத்து இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் கைது செய்தனர்.

இஸ்லாம் மதத்தை துறந்துவிட்ட என்னை சவுதி நாட்டிற்கு திருப்பி அனுப்பினால் என்னை கொலை செய்துவிடுவார்கள், எனவே எனக்கு அடைக்கலம் தாருங்கள் என அப்பெண் டுவிட்டர் வாயிலாக உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்.

புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது” ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போதைக்கு தாய்லாந்தில் அப்பெண் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் இவர் குறித்த விவரங்களை தாய்லாந்து அதிகாரிகள் அனுப்பிவைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவுஸ்திரேலிய குடியுரிமை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்ற நிலையில், சிட்னியில் நான்கு இளம்பெண்கள், சவுதி பெண்ணுக்கு ஆதரவாக அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பெண் எங்கள் சகோதரி போன்றும், அவளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்