பெண் ஆராய்ச்சியாளரை கடித்து தின்ற ராட்சத முதலை: பதற வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் 17 அடி ராட்சத முதலை ஒன்று பெண் ஆராய்ச்சியாளரை கடித்து திங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தோனேசியாவின் வட சுலாவேசியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் 44 வயதான டீசி டுவோ.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள 17 அடி முதலைக்கு மேலிருந்து உணவு போட்டு கொண்டிருந்துள்ளார்.

வீடியோவை காண...

உள்ளிருந்த 17 அடி உயரம் கொண்ட ராட்சத முதலை ஒன்று, 8 அடி உயரம் கொண்ட மதில்மேல் தாவி டீசியை உள்ளே இழுத்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதிகாலை தண்ணீரில் விசித்திரமான வடிவத்தை கண்ட ஊழியர்கள், அதனை உற்றுநோக்கும் போது முதலையின் வாயில் டீசி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு குவிந்த மீட்பு பணியாளர்கள் நீண்ட நேரமாக போராடி முதலையிடமிருந்து டீசி-யின் உடலை மீட்டெடுத்தனர்.

இந்த வீடியோ காட்சியினை அங்கிருந்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

இறந்த ஆராய்ச்சியாளர் டீசி பற்றி அங்கிருந்தவர்கள் கூறுகையில், விலங்குகளிடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர் எனவும், எப்போதும் அமைதியாகவே இருப்பார் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers