அகதிகள் முகாம்களில் வாழும் பெண்களின் நிலை என்ன? வெளிச்சம் போட்டு காட்டும் உலக பிரபலம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அகதிகள் முகாம்களில் உள்ள பெண்களின் நிலை குறித்த புத்தகத்தை எழுதி வெளியிடவுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த சமூகச்செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா உலகம் முழுவதும் இருக்கும் அகதிகள் முகாமுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தில் அங்கிருக்கும் மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்த மலாலா அதைத் தற்போது ஒரு நூலாக வெளியிடவுள்ளார்.

குறிப்பாக, பெண்களின் உணர்வுகளைப் பதிவு செய்வதாக இந்த நூல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே தன்னுடைய சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதியாக வாழ்ந்தது மட்டுமல்லாது தான் இருந்த இடத்திலிருந்து வெளியில் செல்லவே சுதந்திரம் பறிக்கப்பட்டவர் மலாலா.

அதன்பின் உலக அளவில் அவரது செயல்பாடுகள் மூலம் கவனம்பெற்று உலகின் எந்த மூலைக்கும் எந்தத் தடையும் இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.

ஆனாலும் இன்றும் கூடத் தன்னுடைய சொந்த நாட்டுக்குள் செல்வதற்கு மட்டும் இயலாத சூழல் நிலவுகிறது. மனதளவில் தானும் ஓர் அகதியாக உணரும் மலாலா தான் பயணித்துச் சந்தித்த அகதிகளின் முகாம்களில் தன்னுடைய வாழ்க்கையைத் தானே திரும்பிப் பார்ப்பதுபோல உணர்ந்ததை We are Displaced என்ற நூலாக எழுதியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்