350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்: கதறும் பெற்றோர்! மீட்க போராடும் பொலிஸார்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் 350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் 2 வயது சிறுவனை மீட்க 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் மலகா மாவட்டத்தில் கோஸ்டா டெல் சோல் பகுதியில், விளையாடி கொண்டிருந்த சிறுவன் கத்தும் சத்தம் மட்டுமே கேட்டது. ஆனால் அவனை எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தும் போது சிறுவன் 15 அங்குல அகலம் மற்றும் 350 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சிக்கியுள்ளதாக தெரியவந்தது.

இதனையடுத்து விரைந்து வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரமாக சிறுவனை மீட்க போராடி வருகின்றனர்.

மீட்பு படையினர் இதுவரை 250 அடி வரை காமிராவை விட்டு பார்த்துள்ளனர். ஆனால் சிறுவன் இறந்துவிட்டாரா? அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதை தெரிந்துகொள்ள ஒரு புகைப்படமோ, சத்தமோ கண்டறியப்படவில்லை.

கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுவனின் பெயர் யூலன் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய பெற்றோர் விக்கி மற்றும் ஜோஸ் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தங்களுடைய முதல் குழந்தையும் இழந்துள்ளனர்.

மாரடைப்பின் காரணமாக யூலனின் 3 வயது அண்ணன் 2017ம் ஆண்டு மே மாதம் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரிய சோதனை நிகழ்ந்துள்ளதால், மனவேதனையில் சிறுவனின் பெற்றோர் கதறி அழுது வருகின்றனர்.

அவர்களுக்கு ஸ்பெயின் நாட்டின் பிரதமர் Pedro Sanchez உட்பட பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களால் முடிந்த அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்