பெண்கள் குரல் மட்டுமே கேட்கிறது! ஆண்கள் குரல் கேட்கவில்லை: விசித்திர நோயால் தவிக்கும் பெண்ணின் பரிதாப நிலை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் ஆண்களின் குரல் மட்டும் கேட்க முடியாமல் இளம் பெண் தவிக்கும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Xiamen பகுதியைச் சேர்ந்த பெண் Chen. இவர் ஒரு விசித்திர நோயினால் அவதிப்பட்டு வருகிறார்.

இது குறித்து அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Chen-க்கு திடீரென்று ஆண்களின் குரல், அவர்கள் நடந்து வருவது போன்ற சத்தம் கேட்கவில்லை.

ஆனால் பெண்களின் குரல் தெளிவாக கேட்கிறது. அதற்கு பதிலும் அளிக்க முடிகிறது.

இதனால் இவர் அங்கிருக்கும் Qianpu மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு காது, மூக்கு, தொண்டை சிறப்பு பெண் மருத்துவர் Lin Xiaoqing சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அப்போது கூட அவருக்கு அந்த பெண் மருத்துவரின் குரல் கேட்டுள்ளது. ஆனால் அருகில் பேசும் ஆண் மருத்துவரின் குரல் கேட்கவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், நான் பேசுவது அவருக்கு நன்றாக கேட்கிறது. அதே சமயம் அவர் அருகில் ஒரு இளம் ஆண் சிகிச்சைக்காக வந்திருந்தான். ஆனால் அவரின்க் குரல், நடந்து வரும் சத்தம் போன்றவை அவருக்கு கேட்கவில்லை.

இதை low-frequency hearing loss என்று கூறலாம், அதாவது அதிக அளவு மன அழுத்தம், சரியான தூக்கிமின்மை போன்றவையால் இந்த பிரச்சனை வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த பிரச்சனை தீர்க்கப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. மேலும்

இந்த பிரச்சனை காரணமாக அந்த பெண் வெளியில் செல்வதற்கு கூட பயப்படுகிறார் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்