கென்யா நாட்டின் தலைநகரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பிரித்தானியர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்டு குவிந்து கிடக்கும் சடலங்களை அவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் திட்டிரென்று புகுந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலை முன்னின்று நடத்தியவர்கள் சோமாலியப் போராளி குழு அல் ஷபாப் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதலில் 4-ல் இருந்து 6 பேர் துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இருமுறை வெடிகுண்டுகளை வீசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹொட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக்கப்பட்டுள்ளது.
ஹொட்டல் ஊழியர்களையும் அந்த பயங்கரவாத கும்பல் பிணைக்கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல் வெளியானது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியர் எனவும் ஒருவர் அமெரிக்கர் எனவும் எஞ்சியவர்கள் கென்யா நாட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.